" alt="" aria-hidden="true" />
மால், திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு உத்தரவு விட வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் சீனாவின் வூகான் நகரத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் 120க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. குறிப்பாக இத்தாலி, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகம் முழுவதும் இதுவரை 6000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாதது மக்களின் அச்சத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கிடையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 114 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். இதனிடையே கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 9ம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. அதே போன்று மால்கள், திரையரங்கள், கிளப்களையும் மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மால்களில் ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளது. இந்த கடைகளில் லட்சகணக்கனோர் பணி புரிந்து வருகின்றனர். இதே போன்று திரையரங்குகள், கிளப்களிலும் ஆயிரகணக்கான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த ஊழியர்கள் அனைவரும் மத சம்பளத்தை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொரேனா வைரஸ் பாதிப்பால் அதிக மக்கள் கூடும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தபட்ட நிலையில், டாஸ்மாக் பார்களை மட்டும் மூடி அரசு உத்தரவிட்டுள்ளது. மதுவால் அரசுக்கு வரும் வருவாய் மட்டும் குறைந்து விட கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தமிழக அரசு, மால்கள், திரையரங்கள், கிளப் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களையும், அவர்களை நம்பியுள்ள லட்சகணக்கான குடும்பங்களையும் அரசு கவனத்தில் கொண்டு, மார்ச் 31ம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.