இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மையைப் போக்கவேண்டுமானால் போதிய சம்பளம் கிடைக்கும் வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்க வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தனிநபர் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், இந்தியாவில் போதிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதோடு, உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற விமர்சனமும் இருக்கிறது.
ஐடி, ஆட்டோமொபைல், சிறு நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் வேலை உருவாக்கம் மிக மந்தமாக இருப்பதோடு பணியிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இப்பிரச்சினைகளைச் சரிசெய்தால்தான் இந்தியாவில் சமத்துவமின்மையைப் போக்க முடியும் என்று இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் நிறுவனரும் தலைவருமான நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.