புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல அறக்கட்டளை சார்பில் 8 ஆவது ஆண்டாக புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
புத்தக திருவிழாவை முன்னிட்டு மாலை நேர கருத்தரங்குகள் நடைபெற்று வருகிறது. விடியல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் வரவேற்றார். புன்செய் புளியம்பட்டி ரோட்டரி சங்க தலைவர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செவ்வந்திநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேற்று மாலை நடைபெற்ற விழாவில் தொலைக்காட்சி புகழ் பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பெரிய நகரங்களுக்கு இணையாக புன்செய் புளியம்பட்டியில் 8 ஆவது புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா தொடர்ந்து நடப்பது மகிழ்ச்சிக்குரியது. புத்தகம் மனிதனின் அறிவை விசாலமாக்கும். புத்தக வாசிப்பு மனிதனின் கற்பனையை வளர்க்கும். மனிதனுக்கும் மிருகத்திற்கும் உள்ள ஒரே வித்தியாசம் மிருகங்கள் கற்பனை செய்வதில்லை. மனிதன் மட்டுமே கற்பனை செய்கிறான். கற்பனையால் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைத்துள்ளான். புத்தக வாசிப்பு மனிதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்.ஒரு நாட்டில் சிறைச்சாலைகள் குறைய வேண்டும். நூலகங்கள் பெருக வேண்டும். எனவே அனைத்து தரப்பினரும் இந்த புத்தக திருவிழாவை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். என்றார்.
மேலும் இவ்விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தியாகராஜன், குமர செந்தில்ராஜா, சுந்தர்ராஜ், சந்திரன், வெற்றி நர்சிங் கல்லூரி இயக்குனர் ஸ்ரீதர், பி.கே.வடிவேல், பழனிவேல், வாணி தர்மராசு, லோகநாதன், சதீஸ்குமார் மற்றும் பொதுமக்கள், மாணவ மாணவியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்