வேலூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் போதிக்கும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான புதிய பாடதிட்ட விளக்க ஒருநாள் பயிற்சி கருத்தரங்கம் வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் 16.10.2019 காலை 10 மணியளவில் துவங்கியது. இக்கருத்தரங்கில் புதிய பாடபுத்தக நூலாசிரியர்கள் பாராட்டப்பட்டனர்.
இன்றைய நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் தலைமை தாங்கி பேசினார். வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மு.அங்குலட்சுமி முன்னிலை வகித்து பேசினார்.
நூலாசியர் மற்றும் கருத்தாளர் சி.ரவிவர்மன் வரவேற்று பேசினார். நூல் ஆசிரியர் மற்றும் கருத்தாளர்கள் செ.நா.ஜனார்த்தனன் மற்றும் க.ராஜா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
பாராட்டு
வேலூர் மாவட்டத்திலிருந்து தொழிற்கல்வி பாடங்களுக்கு பாடப் புத்தகங்களை எழுதிய செ.நா.ஜனார்த்தனன் (தணிக்கையியல்), க.ராஜா(அடிப்படை மின் பொறியியல்), சி.ரவிவர்மன்(அடிப்படை இயந்திர பொறியியல்), சீனிவாசன்(அடிப்படை மின் பொறியியல்), பரிமளாதேவி(தட்டச்சு), லத்தி மார்த்தாள்(நர்சிங்) ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மோகன், வேலூர் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் மணிவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத்திலிருந்து கணக்குப்பதிவியலும் தணிக்கையியலும், அலுவலக மேலாண்மை தட்டச்சு கணினி பயன்பாடு, அடிப்படை இயந்திரவியல், அடிப்படை மின்பொறியியல், அடிப்படை மின்னணு பொறியியல், நர்சிங், ஆடை வடிவமைத்தல் தயாரித்தலும், உள்ளிட்ட பாடங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மாணவர்களுக்கு அனைத்து வகை ஆலோசனைகள் வழங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 14417
இதன் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சா.மார்ஸ் கூறியதாவது…..
தொழிற்கல்வி பாடப்பிரிவும் மிக முக்கியமான பாடப்பிரிவு ஆகும். தொழிற்கல்வி பாடங்களை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற வைக்க உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 3000 மாணவர்கள் தொழிற்கல்வி பாடங்களை விருப்ப பாடமாக எடுத்து படித்து வருகின்றனர். இவர்களில் சுமார் 300 மாணவர்கள் அரசு பொதுத் தேர்வில் தோல்வி அடைகின்றனர். அவர்களும் வெற்றி பெறக்கூடிய வகையில் ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தினமும் ஸ்லிப் டெஸ்ட் மூலமாக மாணவர்களுக்கு நல்ல யோசனைகளை வழங்கி அனைவரும் தேர்ச்சி பெற வைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்கான பாட புத்தகங்களை எழுதுவதற்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டது பாராட்டுதலுக்குரியது. பாட புத்தகங்களை எழுதி தமிழக அரசுக்கு பெருமை சேர்த்த பாடநூல் ஆசிரியர்களை பாராட்டுகின்றேன். மேலும் மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காக தமிழக அரசின் சார்பில் இலவச தொலைபேசி எண் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி எண்ணை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுக்கு இடையே இருக்கக்கூடிய சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள ஆசிரியர்கள் உதவி செய்ய வேண்டும். அதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 இந்த எண்ணை தொடர்பு கொண்டால் அவர்களுடைய பாட சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் பெறமுடியும் மேலும் தேர்வெழுதுவதில் உள்ள பயம், தேர்வெழுதவும் மேற்படிப்பு பெறவும் ஆலோசனைகள் வழங்கப்படும் என்று கூறினார். அரங்கிலேயே அந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு சந்தேகங்களை கேட்டு விளக்கங்கள் பெறப்பட்டது. எனவே இது போல மாணவர்கள் இந்த தொலைபேசியை பயன்படுத்தி ஐயமின்றி பயமின்றி தேர்வு எழுதுவதற்கான ஒரு அற்புதமான வாய்ப்பினை தமிழக அரசு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது மாணவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கு ஆசிரியர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கூறினார்.
முடிவில் கருத்தாளர் செ.நா.ஜனார்த்தனன் நன்றி கூறினார்